search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனி மூட்டம்"

    அருப்புக்கோட்டையில் காலை நேரத்தில் நடைப்பயிற்சிக்கு செல்வோர் பனிமூட்டத்தில் இருந்து காத்துக்கொள்வதற்காக சுவெட்டர் அணிந்தவாறு சென்றனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் பனி மூட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

    அருப்புக்கோட்டையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் பனி மூட்டம் ஏற்பட்டது. புறவழிச்சாலை, மதுரை சாலை, விருதுநகர் சாலை உள்ளிட்ட சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சாலைகளில் சென்றனர்.

    காலைநேரத்தில் நடைப்பயிற்சிக்கு செல்வோர் பனிமூட்டத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காக சுவெட்டர் போன்றவற்றை அணிந்தவாறு சிரமத்துடன் நடைப்பயிற்சிக்கு சென்றனர். அதிகாலையில் ஏற்பட்ட பனி மூட்டத்தால் அருப்புக்கோட்டையில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
    தருமபுரியில் இன்று காலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
    தருமபுரி:

    தருமபுரியில் இன்று காலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது. குளிரும் வாட்டி எடுத்தது. காலை 7.30 மணி வரை 4 ரோடு, டவுன் பஸ் நிலையம், பென்னாகரம் மேம்பாலம், அதியமான் பை-பாஸ் ரோடு, நல்லம்பள்ளி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பனி பெய்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

    ஓசூர் - தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையிலும் பனி அதிக அளவில் கொட்டியது. இதனால் லாரி, பஸ்கள், உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. 10 அடி தூரத்தில் உள்ள வாகனங்கள் கூட தெரியவில்லை. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்கினர். 

    வழக்கமாக சேலத்தில் இருந்து தருமபுரிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணிக்குள் வந்து சேரும். இன்று காலை பனி அதிகமாக கொட்டியதால் அந்த பஸ்கள் காலதாமதமாக வந்தன.

    மேலும் தொப்பூர் மலைப்பாதையில் ரோட்டின் இருபுறமும் உள்ள மரங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி அதிகமாக கொட்டியது.
    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பனிமூட்டம் அதிகமானதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
    விழுப்புரம்:

    மார்கழி மாதம் பிறந்தாலே பனிப்பொழிவும், கடும் குளிரும் அதிகமாக இருக்கும். நேற்று முன்தினம் மார்கழி மாதம் பிறந்தது.

    இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே பனியின் தாக்கமும், கடுங்குளிரும் அதிகம் உள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு சாரல் மழை போல் தூறியது. இன்று காலை 5 மணிக்கு அதிகளவில் பனி கொட்டியது. இதனால் சாலையின் இருபுறமும் சென்ற வாகனங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த பனிப்பொழிவு காலை 8 மணி வரை காணப்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றன. பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

    இந்த பனிப்பொழிவு விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், கள்ளக்குறிச்சி, ஆசனூர், மடப்பட்டு, திருக்கோவிலூர், எலவநாசனூர்கோட்டை, சின்னசேலம் உள்பட பல இடங்களில் காணப்பட்டது.

    விழுப்புரம் பகுதிகளில் வந்த ரெயில்கள் அனைத்தும் இன்று காலை 8 மணி வரை முகப்பு விளக்கை எரிய விட்டப்படியே வந்தன. #tamilnews
    சூளகிரி அருகே இன்று அதிகாலை கிரானைட் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. அந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    சூளகிரி:

    தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40). இவர் திருச்சி மாவட்டம் புதுக்கோட்டையில் இருந்து ஓசூரில் உள்ள டி.வி.எஸ். நிறுவனத்திற்கு வண்டியின் உதிரிபாகங்களை லாரியில் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    இந்த லாரி இன்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சின்னாறு தேசிய நெடுஞ்சாலை பகுதி அருகே வந்தபோது ஒரே பனி மூட்டமாக இருந்தது. அப்போது ரோட்டோரம் ஜெகதேவியில் இருந்து சூளகிரிக்கு கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. அந்த லாரி மீது சங்கர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சங்கருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் காயம் அடைந்த டிரைவர் சங்கரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சூளகிரி பகுதி முழுவதுமாக இன்று காலை வரை சாலையில் எதிரே வருபவர்களை யார் என்ற தெரியாத அளவிற்கு பனி மூட்டமாக காணப்பட்டது. அப்போது சங்கர் ஓட்டி வந்த லாரியில் விளக்கு எரியவிட்டபடி வந்தும், ரோட்டோரத்தில் பழுதாகி நின்ற வாகனம் சரிவர தெரியாமல் அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
    ×